ஆன்லைன் முன்பதிவு இன்றி நேரடியாக செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது!

Default Image

ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் நேரடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல லட்சக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வயதானவர்களுக்கு போடப்பட்டு கொண்டிருக்கிறது.  ஆனால், வருகிற மே 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தத் தடுப்பூசிக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. 18 முதல் 45 வயதுககு உட்பட்டவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் எந்த நேரத்திலும் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு அதிகம் இருக்கும் நிலையில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டை அதிகரிக்கும். எனவே தான் இந்த ஆன்லைன் முன்பதிவு செய்து அதில் வழியாக முன்பதிவு செய்த வரிசை படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Hockey Asia Cup
Trump - Zelensky
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush