“நவீன வளர்ச்சியிலும் பாகுபாடு உள்ளது, மக்களிடம் மனமாற்றம் தேவை” வைக்கம் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

வைக்கம் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்டமானது தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் கோயில் நுழைவு முயற்சிக்கு வழிவகுத்தது என தெரிவித்தார்.

Vaikom 100 - MK Stalin - Pinarayi Vijayan

கோட்டயம் : இன்று கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில மூத்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” வைக்கம் நூற்றாண்டு விழா கேரளா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே போல, புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவாக விழாவுக்கும் எங்களுடைய அழைப்பை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வந்துள்ளார். இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் பினராயி விஜயனும் ஒருவர்.

பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கு அனுமதி தந்தவர் பினராயி விஜயன். அவருக்கும், கேரள அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. வைக்கம் போராட்டத்திம் கம்பீரத்தை போலவே, பெரியார் நினைவகத்தை கட்டியமைத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். கல்வியிலும், அரசியலிலும் முன்னேறி உள்ள மாநிலம் கேரளா. சமூக வரலாற்று சின்னமாக பெரியார் நினைவகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு வருவோர் கட்டாயம் வைக்கம் நினைவகத்தை பார்க்க வேண்டும் .

கர்நாடகா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்காக தனது எழுத்து மூலம் போராடிய எழுத்தாளர் தேவநூர மஹாதேவா , முதன் முறையாக வழங்கப்பட்ட வைக்கம் விருதை பெற்றுள்ளார். விரைவில் வைக்கம் போராட்ட நினைவலைகளை தமிழக அரசு சார்பில் வெளியிட உள்ளோம்.

உள்ளம் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாமல் செயல்பட்டவர் பெரியார். வைக்கம் நினைவகம் என்பது நமது வெற்றியின் சின்னம். 1924 மார்ச் 30-இல் மகாதேவர் ஆலைய தெருக்களில் எல்லா சமூக மக்களும் நடந்து செல்ல வேண்டும் என போராட்டம் தொடங்கப்பட்டது. அப்போது வரிசையாக கேரள தலைவர்கள் எல்லோரும் கைதானார்கள். அந்த சமயம் காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாருக்கு 1924 ஏப்ரல் 13ஆம் தேதி அழைப்பு கடிதம் எழுதி அனுப்புகிறார்கள். அதற்காக ஒரு நாள் அடையாள போராட்டம் என இங்கு வராமல், 5 மாத காலம் போராடினர். 2 முறை சிறைக்கு சென்றார். 74 நாள் சிறை வாசம் அனுபவித்தார் . சிறையில் அவருக்கு அரசியல் கைதிக்கான மரியாதை தரப்படவிலை. இது பற்றி கேரள புத்தகத்தில் பதிவாகியுள்ளது. யாங் இந்தியா பத்திரிகையில், பெரியார் விடுதலையானால் அங்குள்ள மக்கள் மக்களிச்சியடைவார்கள் என மகாத்மா காந்தி எழுதினார்.

போராட்டத்திற்கு பின்னர் திருவிதாங்கூர் மகாராணி  மகாதேவர் கோயிலில் 3 பக்க வாசலை திறந்து வைக்க உத்தரவிட்டார். இந்தவெற்றி விழா 29.11.1925 அன்று நடந்தது. அந்த வெற்றி விழாவில் பங்கேற்க பெரியார் நாகம்மையாருக்கு அழைப்பு வந்தது. ஆனால், தலைமை வகிக்க மறுத்து, வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார் பெரியார். இந்த வீரம் மிகுந்த அகிம்சை போரில் பெரியாரின் மனைவி நாகம்மையார், பெரியாரின் தங்கை கண்ணம்மாள் ஆகியோரும் பங்கேற்றனர். தமிழ் தென்றல் திருவிக, பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என புகழ்ந்தார். அம்பேத்கர், ‘இந்த சமூக அமைப்புக்கு எதிராக தீண்டத்தாகாத மக்கள் பொதுச்சாலை பயன்படுத்த 1924இல் திருவிதாங்கூரில் எடுத்த முயற்சி மிக முக்கியமானது’ என குறிப்பிட்டு பின்னர் தான் அம்பேத்கர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தனது போராட்டத்தை துவங்கினார்.

பெரியாரின் வைக்கம் போராட்ட வெற்றிக்கு பிறகு, இந்தியாவில் அமராவதி கோயில், பார்வதி கோயில்,  நாசிக்  கோயில் நுழைவு , தமிழ்நாட்டில் சுசீந்திரம்,  மதுரை மீனாட்சி கோயில், திருவண்ணாமலை கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், சென்னை பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் என அடுத்தடுத்த கோயில் நுழைவு போராட்டங்கள் வெற்றி கண்டன.

1939ஆம் ஆண்டு கோயில் நுழைவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த போராட்டத்தை, கோவை ஐயா முத்து,  எம்பெருமான் நாயுடு, கண்ணம்மாள் ,  நாகம்மையார் என பலரும் இந்த வைக்கம் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர். இந்த வைக்கம் போராட்டத்தில் தமிழகம் சார்பாக பங்காற்றியவர்கள் பட்டியல் நீளம். நிதி கொடுத்தவர்களும் அதிகம். ஒன்றிணைந்தால் வெற்றி உறுதி என்பதற்கு வைக்கம் போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு. நவீன வளர்ச்சில் முழுதாக பாகுபாடு அகலவில்லை. எல்லாத்தையும் சட்டம் போட்டு பாதுகாக்க முடியாது. சட்டம் தேவை. அதைவிட மக்களின் மனமாற்றம் முக்கியம். அனைத்தையம் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்பது எங்கள் அரசியல் கொள்கை மட்டுமல்ல. ஆட்சி கொள்கையும் கூட “என  வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்