மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.! கார்கே திட்டவட்டம்.! .
சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. ஒருபக்கம் தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற பிரதான கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஏனென்றால், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு, இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் இறங்கியுள்ளது. இதில் பிரதான போட்டி பாஜகவும், காங்கிரஸும் தான். இந்த 5 மாநில தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, தேர்தல் பிரச்சாரத்தில் இரு கட்சிகளும் மும்மரம் காட்டி வருகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.! 22 பேர் உயிரிழப்பு.!
இந்த நிலையில், மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது கார்கே கூறியதாவது, ஐந்து மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மக்களிடம் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் நாங்கள் நல்லாட்சி கொடுத்துள்ளதால், எந்த சிக்கலும் இல்லை. இதனால் 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.
ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பண வீக்கம், வேலை வாய்ப்பு இன்மை ஆகியவை பாஜக மீது அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். பாஜக அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
2 நாள் தமிழக பயணம்.! இன்று மாலை சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!
மறுபக்கம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பிரச்சனை உள்ளது. அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். எனவே, 5 மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய கார்கே, சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுக்கும்.
அதேபோல் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, நாடாளுமன்ற தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான செமி ஃபைனலாக இருக்குமா என கேட்கிறீர்கள். அவ்வாறு இருக்காது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.