கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு, அதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.