உத்திர பிரதேசம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratistha) நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளதால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
11 நாள் பூஜையை துவங்கிய பிரதமர் மோடி.! ஆடியோ மூலம் வெளியிட்ட முக்கிய செய்தி..!
ராமர் கோயில் கும்பாபிஷக தினத்தை முன்னிட்டு, ராமர் பற்றிய புத்தகங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அதாவது 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமர் பக்தரான துளசிதாசர் என்பவர் ராமர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி எழுதிய தொகுப்பான ராம்சரித்மனாஸ் (Ramcharitmanas) எனும் புத்தகம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு தற்போது அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ராம்சரித்மனாஸ் (Ramcharitmanas) புத்தகமானது மாதந்தோறும் 75000 பாதிப்புகளை மட்டுமே வெளியிடும். ஆனால் இந்தாண்டு இதுவரை 1 லட்சம் அளவிலான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இருந்தும் இந்த புத்தகத்தின் தட்டுப்பாடு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், சுந்தர் காண்டம் மற்றும் ஹனுமான் சாலிசா ஆகிய புத்தகங்களின் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் கீதா பிரஸ் பதிப்பக மேலாளர் லால்மணி திரிபாதி தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…