ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.!

Ram mandir - Ramcharithmanas book sales

உத்திர பிரதேசம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratistha) நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளதால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 நாள் பூஜையை துவங்கிய பிரதமர் மோடி.! ஆடியோ மூலம் வெளியிட்ட முக்கிய செய்தி..!

ராமர் கோயில் கும்பாபிஷக தினத்தை முன்னிட்டு, ராமர் பற்றிய புத்தகங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அதாவது 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமர் பக்தரான துளசிதாசர் என்பவர் ராமர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி எழுதிய தொகுப்பான  ராம்சரித்மனாஸ் (Ramcharitmanas) எனும் புத்தகம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு தற்போது அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக ராம்சரித்மனாஸ் (Ramcharitmanas) புத்தகமானது மாதந்தோறும் 75000 பாதிப்புகளை மட்டுமே வெளியிடும். ஆனால் இந்தாண்டு இதுவரை 1 லட்சம் அளவிலான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இருந்தும் இந்த புத்தகத்தின்  தட்டுப்பாடு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், சுந்தர் காண்டம் மற்றும் ஹனுமான் சாலிசா ஆகிய புத்தகங்களின் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் கீதா பிரஸ் பதிப்பக மேலாளர் லால்மணி திரிபாதி தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TVK -AmitShah
madhagajaraja vs dragon
Jofra Archer Ibrahim Zadran
Maha Kumbh Mela 2025 - Sonam Wangchuk
mutharasan cpi tvk vijay
Shoaib Akhtar
aadhav arjuna and vijay