நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம்- மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்று மாநில தலைமை செயலாளர்,டிஜிபி-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.