ராஜஸ்தானில் இழுபறி.. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி.!
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர மற்ற மாநிலங்களான சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா ஆகிய தொகுதிகளின் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இதில், தெலுங்கானா , சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் என வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல மத்திய பிரதேசத்தில் பாஜக தான் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாஜக இடையேயான முன்னிலை தொகுதிகளில் வித்தியாசம் சுமார் 50ஆக உள்ளது.
10 ஆண்டுகால கே.சி.ஆர் சாம்ராஜ்யம் சரிகிறதா.? தெலுங்கானாவில் முன்னேறும் காங்கிரஸ்.!
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும், குறிப்பிட்ட குறைந்த அளவிலான தொகுதிகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது நிலவரப்படி 104 தொகுதிகளில் பாஜகவும் , 80 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை பெற்று வருகிறது. 5 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது . பாஜக 38 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது . தெலுங்காளவில் காங்கிரஸ் 65 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.