கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது – டெல்லி போலீஸ் தகவல்!
டெல்லியிலுள்ள காவல் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை குற்றவியல் குற்ற மதிப்பீடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த குற்றங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அதில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 20 வரை டெல்லியில் 3063 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 890 குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. . அதிலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிபறிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 24 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. reported இது தொடர்பாக இதுவரை 1746 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1237 பேர் முன்னமே குற்றவழக்கில் சிக்கியவர்கள் எனவும், 509 பேர் புதிய குற்றவாளிகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.