தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.! 

Renuka singh - Narendra singh tomar- Pragalath singh patel

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.  இதில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி கண்டுள்ளது.

இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்களும் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அதில் மத்திய பழங்குடி இன வளர்ச்சித்துறை இணையமைச்சர் ரேணுகா சிங் , சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் முன்னதாக 2019இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் சர்குஜா தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சர்குஜா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வெற்றியடைய முக்கிய காரணமாக விளங்கியவர். இதனால் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பட்டியலில் ரேணுகா சிங் பெயரும் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு முதல்வர் ரேஸில் 3 முறை சத்தீஸ்கர் முதல்வராக இருந்த ராமன் சிங்கும் இருக்கிறார் .

யார் முதல்வர்? ராஜஸ்தானில் தொடர் இழுபறி… சொகுசு விடுதிகளில் பாஜக எம்எல்ஏக்கள்!

அடுத்து, மத்திய பிரதேசத்தில் மொரீனா (Morena) மக்களவை தொகுதி எம்பியாக இருந்து, வேளாண்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் நரேந்திர சிங் தோமர். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமனி (Dimani) தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் . அதே போல, மத்திய பிரதேசத்தில் டாமோஹ் (Damoh) மக்களவை தொகுதியில் எம்பியாக தேர்வாகி மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக பொறுப்பில் இருந்த பிரகலாத் சிங் பட்டேல், தற்போது மத்திய பிரதேசத்தில் நரசிங்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்

மேற்கண்ட மத்திய அமைச்சர்கள் தவிர, மற்ற எம்பிகளான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி , ராஜஸ்தானை சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய் மற்றும் அருண் சாவ் ஆகியோரும் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மீனாவும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.

மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தற்போதுள்ள இலாகாவைத் தவிர, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார்.  மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஏற்கனவே கவனித்து வரும் இலாகாக்களுடன் கூடுதலாக நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக செயல்பட உள்ளார். இணை அமைச்சரான டாக்டர். பார்தி பிரவின் பவார், பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண் துறை  கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுளளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்