இந்தியாவில் குடும்ப பக்தி, தேச பக்தி என இரண்டு வகையான அரசியல் உள்ளது – பிரதமர் மோடி
இந்தியாவில் குடும்ப பக்தி, தேச பக்தி என இரண்டு வகையான அரசியல் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஏற்றி வைத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு பாஜக எம்பிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து பிரதமர் காணொலி மூலமாக மக்களுடன் உரையாற்றி உள்ளார். அப்போது அவர் பேசுகையில், ‘குடும்ப அரசியல் செய்யக்கூடிய கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக மட்டுமே இதற்கு மாற்றாக செயல்படுகிறது. இந்தியாவில் குடும்ப பக்தி, தேச பக்தி என இரண்டு வகையான அரசியல் உள்ளது என தெரிவித்துள்ளார்.