தமிழில் கம்பராமாயணம் உட்பட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது – பிரதமர் மோடி
தமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது.
அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
அதன் பின்னர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது என்று தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி பேச்சு அதன் பின் அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.
- தமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது.
- வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தற்கு மிக்க நன்றி என கூறினார்.
- வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோயிலும் உதாரணமாகத் திகழும் எனறார்.
- தாய்லாந்து , மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் ராமர் வழிபாடு உள்ளது, நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. என்று அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.