இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கு 12 மட்டுமே.!
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் வைரஸ் பரவாமல் இருக்கவும் ,கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது .
இதனால் தலைமை நீதிபதி பாப்டே சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு அறிக்கையை நேற்று முன்தினம் அனுப்பினார். அதில், சுப்ரீம் கோர்ட்டில் தேவையில்லாமல் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் வர வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 15 அமர்வுகளில் 6 அமர்வுகள் மட்டுமே இன்று முதல் செயல்படும். அதில் அவசர வழக்குகள் 12 வழக்குகள் மட்டுமே தினசரி விசாரிக்கப்படும் என கூறினார். மேலும் நீதிமன்ற கேன்டீன்கள் மறுஉத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.