“வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது.. ஆனால் கடைபிடிக்கதான் ஆளில்லை”- உச்சநீதிமன்றம் வேதனை!
கொரோனா பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது, ஆனால் அதனை கடைபிடிக்கதான் ஆளில்லை என உச்சநீதிமன்றம் வேதனை அடைந்துள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 பேர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கு விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி ஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது பேசிய நீதிபதிகள், கொரோனா காலத்தில் ஊர்வலங்கள் நடக்கின்றது, 80 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதில்லை எனவும், மற்றவர்களின் தாடைகளில் தான் முகக்கவசம் தொங்குகிறதாக நீதிபதி உரையாற்றினார். அதுமட்டுமின்றி, வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது. ஆனால் அதனை கடைபிடிக்கதான் ஆளில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், தீ விபத்து குறித்து குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற விபத்துகளை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.