அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேவையான தடுப்பூசி அளவை கிடைக்கப் பெற்றால் 2.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றால் மூன்று மாதங்களுக்குள் டெல்லி அரசால் தடுப்பூசி போட முடியும் என தெரிவித்துள்ளார். டெல்லியில் 18 வயதிற்கும் மேல் சுமார் 1.5 கோடி மக்கள் உள்ளனர். அந்த கணக்கீட்டின்படி, இந்த 1.5 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட டெல்லிக்கு இன்னும் 3 கோடிகொரோனா தடுப்பூசிகள் தேவை.
ஏற்கனவே 40 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி மட்டுமே இந்தியாவை கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கக்கூடிய ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காணொலி காட்சி மூலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், டெல்லியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து இளைஞர்கள் உற்சாகமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போது டெல்லியில் உள்ள 100 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் மையங்கள் 250 முதல் 300 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், டெல்லியில் ஒரு நாளைக்கு,ஒரு லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பெற பரிதாபாத், குர்கான், நொய்டாவில் இருந்து பலர் இங்கு வருகிறார்கள். டெல்லியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பாராட்டி செல்கின்றனர்.
எங்களுக்கு 40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இன்னும் எங்களுக்கு 2.60 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. டெல்லியில் போதிய தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைத்தால், டெல்லி அரசு மூன்று மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…