தில்லி,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இதில் ஸ்கூல் ஆப் பிசிக்கல் சயின்ஸ், ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கான தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றது.இதே போல் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம் பரிவில் சுயேச்சை வேட்பாளர்கள் ஏபிவிபி வேட்பாளர்களை தோற்கடித்தனர்.
இந்நிலையில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி மிகக்குறைந்த அளவே வாக்குகளை பெற்று வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஏபிவிபி மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் அதிரடியாக வாக்குப்பெட்டிகளை தூக்கி செல்ல முயன்றனர். இதையடுத்து ஏற்பட்ட மோதலின் காரணமாக வாக்கு எண்ணிக்கையை ஜேஎன்யூ பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 5185 வாக்குள் பதிவாகின. அதாவது 67.83 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதில் ஸ்கூல் ஆப் லாங்குவேஸ் 69.70 சதவிகிதமும், ஸ்கூல் ஆப் சோசியல் சயின்ஸ் 61.26 சதவிகிதமும் மற்றும் ஸ்கூல் ஆப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸ் 65.55 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது தொடர்ந்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றிகளை குவிக்கும் வகையில் அதிக வாக்குகளை பெற்று வந்தனர். இந்நிலையில் ஏபிவிபி அமைப்பினர் திடீரென வாக்கெடுப்பு மையத்துக்குள் நுழைந்து சீலிடப்பட்ட வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல முயன்றனர். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டது”
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜேஎன்யூ தேர்தல் குழு, வாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தில்லி பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் தனி நபரிடம் இருந்து வாக்கு இயந்திரங்களை வாங்கி தில்லுமுல்லு செய்து பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி பெற்றது. இதற்கு அந்த பல்கலைகழகத்தின் நிர்வாகமும் நிர்பந்திருக்கப்ட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையிலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலிலும் எப்படியாவது குறுக்கு வழியில் ஏபிவிபி வெற்றி பெற வேண்டும் என முயன்று வருகின்றனர். இதற்கு பாஜக மத்திய ஆட்சியதிகாரம் முழுவதையும் பயனப்டுத்தி வருகிறது.இதனால் பிஜேபியின் திருட்டுத்தனம் அம்பலமாகியுள்ளது.
DINASUVADU
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…