#Breaking: ஹரியானாவில் 1,710 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு…!

ஹரியானா மாநிலத்தின்,ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.அதனால்,மருத்துவமனையில் தற்போது 1 தடுப்பூசி கூட இல்லை என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.இந்த நிலையில்,ஹரியானாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தின் பிபி சென்டர் பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,710 தடுப்பூசி மருந்துகள் திருடு போய் விட்டதாகவும் தற்போது பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு ஒரு தடுப்பூசி கூட இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து மருத்துவமனை அளித்த புகாரில்,”1270 கோவிஷீல்ட் தடுப்பூசியும் 440 கோவாக்சின் தடுப்பூசியும் பாதுகாப்பாக ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால்,திடீரென்று இந்த தடுப்பூசிகள் திருடு போய்விட்டது.இதனால்,பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரு தடுப்பூசி மருந்து கூட மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை”,என்று தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த புகாரின் அடிப்படையில்,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எனினும்,
அரசு மருத்துவமனையில் 1,710 தடுப்பூசிகள் திருடு போய் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025