மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா நிறுவனங்கள், மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் மற்றும் நாடக அரங்குகளில் 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.