உத்திரபிரதேசத்தில் இளைஞர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பல இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது கார்களில் அட்டகாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இளைஞர்கள், தங்களுடைய கார்களின் மேல் ஏறி நின்று அட்டகாசம் செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மொராதாபாத் காவல் துறை உயர் அதிகாரி ( Senior Superintendent Of Police) , இளைஞர்கள் யாரென கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்கள் யாரேனும் இதுபோன்ற ஸ்டண்ட் செய்தால் அவர்களுடைய வாகன உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சாலையில் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனங்களை ஓட்டி ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் மீது போக்குவரத்து விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…