மரத்தை தோளில் சுமந்து கொண்டு சென்ற இளைஞர்கள்..!
ஜார்க்கண்ட் துணை கலெக்டர் சஞ்சய் குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது. தற்போது, நகரமயமாக்கல் காரணமாக பல மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. மரங்களை வெட்டாமல் மரங்களை வளர்க்க வேண்டும் என அரசு மற்றும் தன்னார்வலர்கள், பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை ஜார்க்கண்ட் துணை கலெக்டர் சஞ்சய் குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்கு மேல் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில், சில இளைஞர்கள் ஒரு மரத்தை தோளில் சுமந்து கொண்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். சில நேரங்களில் மரங்கள் இரக்கமின்றி வெட்டப்படுகிறது. இருப்பினும், இந்த இளைஞர்கள் தங்கள் தோள்களில் மரத்தை சுமந்துகொண்டு செல்வதை பார்க்கும்போது, மரத்தை வெட்ட வேண்டிய அவசியமில்லை எனவும், ஒரு மரத்தை வெட்டுவதற்கு பதிலாக அதை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று மண்ணில் நடலாம் என்பதை இந்த புகைப்படம் சொல்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞர்களை பலர் பாராட்டியுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு 5,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது.
A picture says more than 1000 words..!#SaveTrees @ParveenKaswan pic.twitter.com/fFvAZwU4SN
— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) July 3, 2021