வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது. ஆனால், சிலரது அலட்சியத்தாலும், கவன குறைபாடலும் தினம் தினம் விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது.
தற்போது, பெங்களூரில் நடந்த சாலை விபத்து தொடர்புடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள், சாலையின் வலது பக்கத்தில் வரவும், பின்னால் வேகமாக வந்த கியா கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியது. இதில் ஸ்கூட்டில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு காற்றில் பறந்து தரையில் விழுந்தனர்.
இந்த விபத்து நெஞ்சை பதற வைக்கிறது, இது லேசான விபத்து என்றாலும், கொஞ்சம் மிஸ் ஆனால்தால் உயிர் தப்பியது. இல்லையென்றால், நசுங்கி இருப்பார்கள். மேலும் இந்த விபத்து இது சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு பிரதீக் சிங் என்ற பயனர், “எனக்கு பின்னால் ஒரு பைக்கும் பைக்கின் பின்னால் ஒரு கியா காரும் இருந்தது. நான் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். கியா கார் தனது ஃபோனில் இருந்ததால் சிக்னலைப் பார்க்கவில்லை. அவர் பைக்கை இடிக்க, பைக்கர் என் காரை முட்டி மோதினார். ஆனால் கார் மற்றும் பைக்கில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…