ரூம் மேட்டை கொன்று விட்டு, உடலை வெளியில் தூக்கி எறிந்த 26 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தபா என்னும் பகுதியில் 35 வயதுடைய ராஜு நந்தீஸ்வரர், 26 வயதுடைய தேவன்ஷ் வாகோட் என்பவருடன் ஒரே அறையில் தங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் கார் மெக்கானிக்காக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து தேவன்ஷ் வாகோட், ராஜுவை கூர்மையான பொருளைப் பயன்படுத்தி குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ராஜு அந்த இடத்திலேயே பரிதமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராஜுவின் உடலை அறைக்கு வெளியே வீசி விட்டு அந்த அறையை சுத்தம் செய்துவிட்டு வாகோட் தூங்கியுள்ளார்.
இந்த அறைக்கு அருகில் தரையில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின், தேவன்ஷ் வாகோட் தான் குற்றவாளி என கண்டறியப்பட்ட நிலையில், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வாகோட்டை கைது செய்துள்ளனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…