சீருடையில் இருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் முகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பெண் போலீஸார் ஒருவர் சீருடை அணிந்து இளஞ்சிவப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிரபாத் குமார் என்பவர் பெண் கான்ஸ்டபிளை பார்த்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பெண் கான்ஸ்டபிள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பிரபாத் குமார் இரும்பு கம்பியால் பெண் கான்ஸ்டபிளை தாக்கினார்.
பெண் கான்ஸ்டபிள் முகத்தில் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது அங்கு இருந்தவர்கள் பிரபாத் குமாரை துரத்திச் சென்று பிடித்தனர். அதிக இரத்தப்போக்கு அதிகம் காரணமாக பெண் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பிரபாத் குமார் ஒரு வழக்கறிஞரின் மகன் என்று போலீசார் தெரிவித்தனர்.பிரபாத் குமார் மீது கொலை முயற்சி, கிண்டல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார். பெண்கள்/பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க இந்த இளஞ்சிவப்பு பிரிவு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…