ஆட்சேர்ப்புத் தேர்வுத்தாள் கசிந்ததால் இளைஞர்கள் போராட்டம்..! போலீசார் தடியடி நடவடிக்கை..!

Default Image

உத்தர்கண்டில் ஆட்சேர்ப்புத் தேர்வுத் தாள் கசிவுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் நகரில் ஆட்சேர்ப்புத் தேர்வுத் தாள் கசிவுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. உத்தரகாண்ட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய பல்வேறு ஆள்சேர்ப்பு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வேலையற்ற இளைஞர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் வற்புறுத்தியதால் இளைஞர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் சில இளைஞர்கள் காயமடைந்தனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இளைஞர்களுக்கு எதிரான அட்டூழியத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று பிசிசி (PCC) துணைத் தலைவர் மதுரா தத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

recruitment exam paper was leaked
[Image Source : Twitter/@htTweets]

இது குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “எங்கள் அரசு இளைஞர்களுக்கு ஆதரவாக முடிவுகளை எடுத்து வருகிறது. எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும். இளைஞர்கள் தங்களை யாரும் தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்,” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்