உலக அமைதி வேண்டி 90 நாளில் 4,035 கீ.மீ தூரம் ஓடி வந்த இளம்பெண்!
உலக அமைதி வேண்டி ராஜஸ்தானை சேர்ந்த சுபியா (33 )இவர் காஷ்மீரிலிருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சார்ந்த சுபியா இவர் தடகள வீராங்கனை.இவர் இந்தியா விமான துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் உலக அமைதி , மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியாகவும் ,காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ஓட்டப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து தேசிய கொடியை ஏந்தியபடி ஓட்டத்தில் தொடங்கி தினமும் 50 கிலோ மீட்டர் வீதம் 14 மாநிலங்களை கடந்து 100 நாள்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரியை கடக்கலாம் என சுபியா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே 90 நாள்களில் ஆயிரத்து 4,035 கிலோமீட்டர் கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார்.சுபியாவின் ஓட்டப் பயணத்துக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தடகள சங்கத்தினர் அந்தந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் செய்திருந்தனர்.