சாலையில் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்! போலீசார் விசாரணை!

சாலையில் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்.
இந்தூரிலுள்ள மகாராஜ் யஷ்வந்த் ராவ் மருத்துவமனை முன்பதாக, வழக்கமாக ஒரு பெண் தூங்குவது உண்டு. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். போலீசார் அப்பெண் எப்படி இறந்தார் என விசாரித்த போது, மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமரா பதிவை எடுத்து பார்த்துள்ளது.
அந்த வீடியோவில்,அப்பெனின் அருகே சுற்றிசுற்றி வந்த இளைஞர், படியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கீழே இழுத்து வந்து, பிளாஸ்டிக் கயிறால் கழுத்தை இறுக்கியுள்ளான். அந்த இளைஞனிடம் இருந்து அப்பெண் தப்புவதற்கு போராடுகிறாள். ஆனால், அந்த பெண்ணை கொல்ல வேண்டும் என்ற வெறியோடு, கல்லால் தலையிலும், முகத்திலும் அடிக்கிறான். சற்று நேரத்தில் அந்த பெண் துடிதுடித்து இறந்து போகிறாள். இதனையடுத்து, அந்த இளைஞனிடம் போலீசார், அப்பெண்ணை எதற்காக கொன்றார்? என விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025