ஒரு ஜோடி ஒன்றாக திருமணம் செய்துகொள்வதை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால், ஒரே மாப்பிள்ளை ஒரே நேரத்தில் இரண்டு மணப்பெண்களுடன் திருமணம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. இரண்டு பெண்கள் ஒரே இளைஞரை விரும்பியதால் அந்த இளைஞர் இருவரையும் மணந்தார். மணமகனின் பெயர் சாந்து , இரண்டு பெண்களும் பரஸ்பர ஒப்புதலால் சந்து இருவரையும் திருமணம் செய்துகொண்டார்.
சாந்து ஒரு விவசாயி. ஓராண்டுக்கு முன்பு சுந்தரி என்ற பெண்ணை காதலித்தார், பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன்பின், ஒரு மாதத்திற்குப் பிறகு ஹசீனா என்ற மற்றொரு பெண்ணை சாந்து காதலித்தார். அவரையும் சாந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், இதைத்தொடர்ந்து, மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். எனவே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்னர், மூவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மணமகனும், மணமகளும் ஒன்றாக வாழ்கிறார்கள், அவர்களுக்கு இடையே எந்த வாக்குவாதமும் இல்லை என்று கிராமத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால், திருமணத்தின் இந்த முடிவை இரு பெண்களின் குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டன. இவர்கள் கடந்த 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் சந்துவின் குடும்பத்தினரும், இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஒரு நெட்டிசன் இந்த திருமண வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…