பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் என்னும் நகரில் கிருஷ்ணா காலனி எனும் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – வசந்தா ஆகியோரின் மகன் தான் ஒன்பது வயதுடைய தீட்சித். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தீட்சித் இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பதற்றமடைந்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவே அச்சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தீட்சித்தை தான் கடத்தி வைத்திருப்பதாகவும் நாற்பத்தி ஐந்து லட்சத்தை கொடுத்துவிட்டு அவனை மீட்டு செல்லும்படி கூறி இணைப்பை துண்டித்துள்ளார் அந்த மர்ம நபர். இது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பின் கடத்தியவரை பிடிப்பதற்காக போலீஸ் அறிவுரைப்படி நேற்று முன்தினம் மகபூப்நகர் கூட்டு ரோட்டில் பணத்துடன் ரஞ்சித் சில மணி நேரம் வரை காத்திருந்து உள்ளார். ஆனால் அங்கு யாரும் வரவில்லை ஆனால், நேற்று காலை ஊருக்கு வெளியே தீட்சித்தின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரஞ்சித் அவர்களின் குடும்பத்திற்கு நன்கு பழக்கமான 22 வயதுடைய சாகர் எனும் இளைஞர் தான் என அறிந்து, அதன்பின் போலீசார் அவரை பிடித்து விசாரித்த பொழுது பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாகவும், ஆனால் சிறுவனாக இருந்தாலும் தீட்சித் தன்னை அடையாளம் கண்டுகொண்டதால் வெளியே சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…