ஃபாலோ செய்த இளைஞன்.. செருப்பால் அடித்து விரட்டிய கல்லூரி மாணவி.! வைரலாகும் வீடியோ…
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் விடுதியில் இருந்து பெண் ஒருவர் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து சென்று நபர் ஒருவர் துன்புறுத்தியுள்ளார். மாணவியை பின்னால் இருந்து அணுகி அநாகரீகமாக அந்த நபர் நடந்து கொண்டார்.
தனது பாதுகாப்பிற்கு பயந்து, மாணவி தனது குரலை உயர்த்தி, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை உதவிக்காக அழுதுகொண்டே அழைத்தார். அவர் அழுத சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துன்புறுத்திய அந்த நபரை தப்பிக்கவிடாமல் பிடித்தனர்.
பிறகு, அந்த மாணவி மிகவும் கோபத்துடன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அழுதுகொண்டே பின்தொடர்ந்து துன்புறுத்திய அந்த நபரின் கன்னத்தில் ப்ளார்..ப்ளார்..என பல முறை அறைந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ಹಾಸ್ಟೆಲ್ನಿಂದ ಕಾಲೇಜಿಗೆ ತೆರಳುತ್ತಿದ್ದ ವಿದ್ಯಾರ್ಥಿನಿಯನ್ನು ಚುಡಿಯಾಸಿದ ಎಂದು ರೋಡ್ ರೋಮಿಯೋಗೆ ಯುವತಿ ಚಪ್ಪಲಿಯಿಂದ ಬಾರಿಸಲಾರಂಭಿಸಿದ್ದಾಳೆ. ಈ ದೃಶ್ಯ ಕಂಡು ಬಂದಿದ್ದು, ಉಡುಪಿ ಜಿಲ್ಲೆ ಕುಂದಾಪುರ ತಾಲೂಕಿನ ಒಕ್ವಾಡಿ ರಸ್ತೆಯಲ್ಲಿ..#newsfirstkannada #KannadaNews #udupi #rudebehavior #viralvideo pic.twitter.com/ACU7NNeDym
— NewsFirst Kannada (@NewsFirstKan) June 9, 2023
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த அதிகாரிகளிடம் குற்றவாளியை பிடித்து அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.பின், குந்தாப்பூர் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.