கர்நாடகாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததால், டாஸ் போட்டு பார்த்து ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் 27 வயதுடைய மகன் பக்கத்து கிராமத்தில் உள்ள 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதேபோல கடந்த 6 மாதத்திற்கு முன்பு இளைஞன் வேறு ஒரு கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அறிமுகமாகி அவரையும் காதலித்து வந்துள்ளார். ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் இவர் உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் இந்த இரண்டு காதலிகளுக்குமே இந்த உண்மை தெரியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் இந்த இளைஞனின் காதலுக்கு அவரது குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்காமல், வேறு ஒரு பெண்ணை திருமணம் நிச்சயிக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்நேரத்தில் இந்த இளைஞனை காதலித்த இரு பெண்களும் அவர்களது வீட்டில் கூறி, நேராக அந்தப் இளைஞனின் வீட்டிற்கே சென்று பேசி உள்ளனர். அப்பொழுது தான் இந்த இளைஞன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் பழக்கத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் அந்த கிராமம் முழுவதும் பரவியதை தொடர்ந்து, ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு இதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி இந்த பஞ்சாயத்தில் அந்த பையன் யாரை திருமணம் செய்ய விரும்புகிறார் என கேட்டதற்கு அவன் பதிலே கூறவில்லையாம். ஆனால் பெண்கள் இருவரும் அந்த பையன் தான் வேண்டும் என ஒரே முடிவாக இருந்துள்ளனர். எனவே இறுதியாக இந்தப் பெண்கள் இருவரையும் வைத்து டாஸ் போட்டு இந்த பிரச்சனையை கிராம பஞ்சாயத்து முடித்து வைத்துள்ளது.
அதன்படி டாஸில் வெற்றி பெற்ற பெண்ணை பையன் அனைவர் முன்பும் கட்டியணைக்க, மற்றொரு பெண் அனைவர் முன்பும் அவர்களை அறைந்து விட்டு உங்கள் முன்பு நான் நன்றாக வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு சென்றுள்ளார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது அதிக அளவில் மக்களால் பேசப்பட்டு வருகிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…