கள்ள உறவு குற்றம் அல்ல ..!மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல..!உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Default Image

மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல உச்ச நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு ..

இன்று கள்ள உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக்கோரிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வில்  நடைபெற்றது.பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை  வாசித்தார்.அவர் கூறுகையில், இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.மேலும் கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை.மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.கள்ள உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல்சாசனத்திற்கு விரோதமானது.

Related image

எனவே  கள்ள உறவில், ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 497 நீக்கப்பட்டது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு அளித்துள்ளது.அமர்வில் இருந்த  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி நாரிமன், நீதிபதி சந்திரசூட், நீதிபதி கான்வில்கர், நீதிபதி இந்து மல்ஹோத்ரா நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Doctors Strike
TN Govt Hospital Kalaignar
Guindy Govt hospital - Tamilnadu CM MK Stalin
Anbumani Ramadoss
kalaignar centenary hospital
Raj