மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்கள் நேரில் வருகைபுரிந்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் , பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கத்தினரும் வீரர்களுடன் உடன் போராட்டத்தில் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று கூறியிருந்தார். இதனை அடுத்து இன்று மல்யுத்த வீரர்கள் மத்திய அமைச்சர் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் பஜ்ரங் புனியா, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் மற்றும் வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள், முக்கியமாக 3 கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். அதில் முதலாவதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும். விளையாட்டு துறை பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யபட வேண்டும். இனி வரும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஓர் அமைப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இன்னும் மத்திய அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை துவங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…