ஆசியாவின் பணக்கார இந்தியர் கௌதம் அதானி இல்லை..! முகேஷ் அம்பானி தான்..!

Default Image

ஆசியாவின் பணக்கார இந்தியராக இருந்த கெளதம் அதானி தற்பொழுது உலக பணக்காரர்கள் பட்டியலில் 15 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளர்.

ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, தொழிலதிபர் கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியராக ஆனார். தற்பொழுது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 வது இடத்தில் உள்ளார்.

அதானி குழுமம் பல வருடங்களாக பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கியல் (அக்கவுண்ட்ஸ்) மோசடியில் பங்கேற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்  ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ.46,086 கோடியை இழந்தது.

adani20000

நிபுணத்துவம் பெற்ற சிறிய நியூயார்க் நிறுவனத்தின் அறிக்கையின் படி , இரண்டு வர்த்தக அமர்வுகளில் அதானி குழுமம் 50 பில்லியன் (கிட்டத்தட்ட 5000 கோடி) அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதில் அதானி மட்டுமே 20 பில்லியன் (கிட்டத்தட்ட 2000 கோடி) அமெரிக்க டாலருக்கும் அதிகமாக அல்லது அவரது மொத்த சொத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்