உலகின் மிக நீளமான நதிபயணக் கப்பல்.. கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!

Default Image

உலகின் மிக நீளமான நதிபயணக் கப்பல், எம்வி கங்கா விலாஸை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

உலகின் மிக நீளமான நதிபயணக் சொகுசு கப்பல் சேவை எம்வி கங்கா விலாஸை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த கப்பல் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி வங்காளதேசம் வழியாக சுமார் 3,200 கிமீ பயணம் செய்து 51 நாட்களுக்கு பிறகு அசாமில் உள்ள திப்ருகாரை சென்றடைய உள்ளது.

இந்த கப்பலுக்கு ஒரு நாளைக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த கப்பலில் 18 அறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம், ஸ்பா மற்றும் திறந்தவெளி கண்காணிப்பு தளம் போன்ற வசதிகளும் உள்ளது. 3 தளங்கள் கொண்ட இந்த சொகுசு கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் பயணிக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் புனித நகரமான உத்தரபிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்த வாரணாசியில் கங்கை நதிக்கரையில் டென்ட் சிட்டியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்