PM Modi [Image source : Twitter/@pmoindia ]
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ‘யுகே யுகீன் பாரத்’ இந்தியாவில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் மாநாட்டு அரங்கு திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் தனது உரையின் போது, உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ‘யுகே யுஜீன் பாரத்’ இந்தியாவில் விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார்.
இந்த அருங்காட்சியகம் விரைவில் டெல்லியில் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள தகவலின்படி, இந்த அருங்காட்சியகம் கிட்டத்தட்ட 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில் ஒரு அடித்தளம், தரை தளம் மற்றும் இரண்டு கூடுதல் தளங்களில் சுமார் 950 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அருங்காட்சியகம் ராஷ்டிரபதி பவனைச் சுற்றி வடக்கு மற்றும் தெற்குத் பகுதிகளுக்குள் அமைக்கப்படும். யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் 5,000 ஆண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துக்கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இது பல்வேறு சகாப்தங்கள், துடிப்பான கலாச்சாரங்கள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் இந்திய அறிஞர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளின் பெருமையை எடுத்துக்காட்டும்.
இந்த அருங்காட்சியகம் மௌரியர்கள், குப்தர்கள் மற்றும் குஷானர்கள் போன்ற பண்டைய இந்திய பேரரசுகளுக்கு மரியாதை செலுத்துவதோடு மற்றும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…