ஆர்டர் பன்னது சிக்கன்…வந்ததோ நல்லா வறுத்த டவள்…அதிர்ச்சியில் ஆர்டர் செய்த பெண்!

Default Image

பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்ததில் டவள் வந்ததால் அதிர்ச்சி.

பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக வறுத்த சிக்கன் ஆர்டர் செய்தபோது சிக்கனுக்கு பதிலாக டவள்(துண்டு) வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜொல்லிபீ என்பது பிலிப்பைன்ஸ் ஜொல்லிபீ ஃபுட்ஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் ஒன்று, ஜொல்லிபீ உணவகம் வறுத்த கோழி விற்பனையில் பிரபலமானது.

அலிக் பெரெஸ் என்ற பெண் தனது மகனுக்காக செவ்வாயன்று பிலிப்பைன்ஸில் உள்ள ஜொல்லிபியில் ஃப்ரைட் சிக்கன் ஆர்டர் செய்திருந்தார், ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டபின், ​​அவர் தன் மகனுக்காக சில சிக்கனை வெட்ட முயன்றார், அப்போது அவர் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தார்.

அதில் நன்றாக வறுக்கப்பட்ட டவள் ஒன்றை பார்த்ததும் அந்த பெண் விரக்தியின் உச்சத்தை சென்றார். இதைப்பற்றி அந்த பெண் கூறுகையில், இந்த நிகழ்வு தன்னை தாமதமாக விரக்தியடையச் செய்ததாகவும், என் மகனுக்கு கோழியை ஆர்டர் செய்தேன் அதை என் மகன் கடிக்க முயற்சித்தான், பின்பு நான் அதை ​​வெட்டும்போது அது மிகவும் கடினமாக இருந்தது, பின்பு என் கைகளால் அதை உடைத்து பார்க்கும் போது அது டவளாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பெரேஸ், மக்கள் தங்கள் உணவில் “வித்தியாசமான பொருட்களை” கண்டுபிடிப்பதைப் பற்றி புகார் கூறுகிறார்கள். “அது உண்மையில் நடக்கும் என்று இப்போது எனக்குத் தெரிந்தது என்று கூறியுள்ளார். இது மோசமானது என்றும் இதற்காக என்னை அமைதிப்படுத்திக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த டவள் மூலம் மற்ற எந்தெந்த உணவுகள் அந்த உணவகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்மால் சிந்தித்து கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின் ஜொல்லிபீ ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அந்த உணவகம் 3 நாட்கள் மூடப்பட்டு, சம்பவம் குறித்து முற்றிலுமாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜொல்லிபியின் அனைத்து கிளைகளுக்கும் உணவு தயாரிப்பு முறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக நினைவூட்டல்களை அனுப்பியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்