வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது- உ.பி. அரசு!
வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால் முதுகெலும்பு உடைந்த அந்தப்பெண், 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், அவசர அவசரமாக எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்தநிலையில், இந்த வன்கொடுமை வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்ககோரி என உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. மேலும், வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.