கொரோனா அறிகுறி இருப்பதாக நினைத்து இளம்பெண் ஒருவரை பேருந்திலிருத்து தூக்கி எறிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 15-ம் தேதி, 19 வயதுடைய அன்ஷிகா யாதவ் மற்றும் அவரது தாயும் டெல்லியில் இருந்து ஷிகோகாபாத் நகருக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதனிடையே அன்ஷிகாவிற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக கருதிய சக பயணிகள், பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவலை தெரிவித்தனர்.
உடனடியாக ஒட்டுநர் மற்றும் நடத்துநர் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, அந்த பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர். தூக்கி வீசியதில் படுகாயமடைந்த அந்த பெண், 30 நிமிடங்களில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது இந்த தகவலை அறிந்த டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மாலிவால், உத்திரப் பிரதேச போலீசில் புகார் அளித்ததோடு, ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை வழக்குப்பதிவு ஏன்..? செய்யவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டும், இது போன்ற கொடூரமான செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரை மறுத்து விட்டு இயற்கையான மரணம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து பிரேத பரிசோதனையில் பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறிய மதுரா எஸ். எஸ். பி கவுரவ் குரோவர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு எஸ். பி. ஷிரிஷ் சந்திராவிடம் உத்தரவிட்ட பின்னரே, இந்த உ . பி-யில் நடந்த கொடூரமான சம்பவம் வெளி வந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…