ஒரே நாளில் 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்ட பெண்…!
பீகார் மாநிலத்தில் தேவி என்ற பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் அவத்பூர் கிராமத்தில் வசித்து வரும் 63 வயதான தேவி என்ற பெண், கடந்த 16ஆம் தேதி தங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பள்ளியில் ஒரே அறையில் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தேவி தனது பெயரை தடுப்பூசி செலுத்த, வெளியே பதிவு செய்துவிட்டு முதலில் ஒரு வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பின் அங்கிருந்து ஐந்து நிமிடங்கள் காத்திருந்த அவர், அடுத்த வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அங்குள்ள தடுப்பூசி முகாமிற்கு சென்று சுகாதார பணியாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் தேவி எதற்காக இரண்டு வரிசையிலும் இந்த தடுப்பூசி வைத்துக் கொண்டால் என்று தெரியாத நிலையில், தேவியின் உடல் நிலை குறித்து மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வருகிறது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் அந்த மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.