மும்பை ரயில் நிலைய நடைமேடையில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்.
மும்பையில் உள்ள தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் அனைவரும் காத்திருந்த சமயத்தில், நடைமேடையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ரயில் வரும் சமயம் பார்த்து திடீரென தண்டவாளத்தை நோக்கி குதித்துள்ளார். அவரது அருகிலேயே வந்து கொண்டிருந்த காவலர் இதனை கண்டதும் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்தப் பெண்ணை தண்டவாளத்தின் மறுபக்கம் இழுத்து காப்பாற்றியுள்ளார்.
தற்கொலை செய்ய முயற்சித்த அந்த பெண் ஏதோ ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் ரயில் வரும் சமயம் பார்த்து பெண் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், நொடிப்பொழுதில் காவலர் அந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…