விரைவாக எவரெஸ்டை எட்டி சாதனை படைத்த பெண்..!

Default Image

உலகிலேயே மிக உயரமான இமயமலையில் இந்த எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 8,848.86 அடி உயரம் கொண்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே இந்த மலையில் ஏற முடியும் என்பதை முறியடிக்கும் விதமாக இரண்டு கால்கள் இல்லாதவரும், கண் பார்வை இல்லாதவரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை மிக குறுகிய நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சான் யிங் ஹங் என்ற பெண்மணி. இவர் ஹாங்காங்கை சேர்ந்த முன்னாள் ஆசிரியர். இவரின் வயது 44 ஆகும். இதற்கு முன்னர் சான் யிங் ஹங் 2017 இல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார்.

ஆனால், தற்போது எவரெஸ்ட் சிகரத்தை சான் யிங் ஹங் 25 மணி 50 நிமிடங்களில் ஏறி பெரும் சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர், 39 மணி 6 நிமிடத்தில் நேபாளத்தை சேர்ந்த புஞ்சோ ஜங்மு லாமா என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததே சாதனையாக இருந்துவந்தது. தற்போது இவரின் சாதனையை சான் யிங் ஹங் முறியடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்