ரூ.250 உணவுக்கு ஆசைப்பட்டு ரூ.50,000-ஐ இழந்த பெண்!
கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண், ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்க ஆசைப்பட்டு, ரூ.49,996-ஐ இழந்துள்ளார்.
இன்று பலரும் இணையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது மோகம் கொண்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதில் மோசடியில், ஈடுபடுபவர்களும் பெருகிவருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண் வீட்டில் சமைப்பதில்லை எப்போதுமே ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.
இதனை அடுத்து இவர் முகநூலில் வரும் விதவிதமான உணவு வகைகளை தன்னுடைய கார்டு மூலம் பணம் கட்டி வீட்டிற்கு வரவைத்து சாப்பிடுவது வழக்கம். இவை சமூக ஊடகத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த பெண் அந்த இலவச உணவு வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டு, அதில் குறிப்பிட்ட போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் வெப்சைட்டில் இருக்கும் படிவத்தில் தன் முகவரி மற்றும் கார்ட் பின்நம்பர் போன்ற விவரங்களை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் அந்த கார்டில் இருந்து 49,996 ரூபாய் எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் ஹோட்டல் நம்பருக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது கண்டு மேலும் அதிர்ச்சியில் இருந்தார். அதனால் அப்பெண் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.