திருமணத்திற்காக காதலனிடம் 11.5 லட்சம் காதலி கொடுத்துவைக்க, மொத்தமாக சுருட்டிவிட்டு ஊருக்கு கிளம்பிய காதலன் காதலன் மீது புகார் கொடுத்துள்ள காதலி.
பீகாரை சேர்ந்த 31 வயதுடைய இந்திரன் தத்தா என்பவர் மேற்கு வங்காளத்தில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூர் சென்றிருந்த பொழுது பெண் ஒருவரை சந்தித்து இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் கல்லூரி பருவம் முதல் ஒன்றாக ஊர் சுற்றி பல வருடம் காதலித்து வந்துள்ளனர். தத்தா என்னும் அந்த ஆண் தான் காதலித்த பெண்ணிடம் நாம் திருமணம் செய்து வாழ வேண்டுமானால் நிறைய பணம் தேவைப்படும். அதனால் இருவரும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து அதில் சேகரித்து வைப்போம் என கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் அவளது காதலனை நம்பி தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்த பணம் அத்தனையையும் அந்த அக்கவுண்டில் போட்டு இருவரும் சேர்த்து வந்துள்ளனர்.
11.5 லட்சம் வரை பணம் வந்த பொழுது திடீரென அந்த பணம் முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டு பீகார் நோக்கி கிளம்பியுள்ளார் காதலன். அங்கு சென்று வெகு நாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அந்த பெண் அவருக்கு தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார், ஆனால் தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது. எனவே சந்தேகம் அடைந்த அந்த பெண் தற்பொழுது காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கில் தனது காதலன் மீது புகார் அளித்துள்ளார். எனவே அவரை தலைமறைவாக உள்ளதாக போலீசார் தேடி வருகின்றனர். மேலும் நூதனமான முறையில் கொள்ளையடிக்க கூடிய காதலனாய் இருந்தாலும் பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…