டூத் பேஸ்டுக்கு பதிலாக எலி விஷத்தை வைத்து பல் துலக்கிய பெண் பரிதாபமாக பலி…!

Default Image

மும்பையில், டூத் பேஸ்டுக்கு பதிலாக எலி விஷத்தை வைத்து பல் துலக்கிய பெண் பரிதாபமாக பலி.

மும்பையின் தாராவியைச் சேர்ந்த அப்சனா கான் 18 வயது இளம்பெண், செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல் துலக்குவதற்கு எழுந்தபோது  பற்பசை அருகில் இருந்த, எலியின் விஷ கிரீம் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் பற்பசை பதிலாக எலியின் விஷக் க்ரீமை வைத்து பல்துலக்கியுள்ளார்.

பின் அப்பெண் சுவை மற்றும் வாசனையின் வேறுபாட்டை உணர்ந்த பின் அப்பெண் பேஸ்டை துப்பி வாயை கழுவினாள். சிறிது நேரம் கழித்து அவளுக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. தன் குடும்பத்தார் திட்டுவார்கள் என்று பயந்து தனக்கு வயிற்று வலியாக இருப்பதாக கூறி, சில மருந்துகளை எடுத்துக்கொண்டாள்.

ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், 3 தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளுக்குச் அழைத்து செல்லப்பட்டார். இறுதியில் அவள் செய்த தவறு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து செப்டம்பர் 12 அன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண் விஷம் குடித்து இறந்ததாக மருத்துவ அறிக்கை முடிவுகள் வெளியானது.

இதனையடுத்து தாராவி காவல் நிலையம், தடவியல் பகுப்பாய்வுக்காக மாதிரியை சேகரித்து உள்ளது. விரைவில் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரின் வாக்குமூலங்களை சேகரிக்க உள்ளனர்.  மேலும், போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்