குழந்தை பிறந்த 3 மணி நேரத்தில் தேர்வு எழுதச் சென்ற பெண்..! வியப்பில் மக்கள்..!
பீகாரில் குழந்தை பிறந்த 3 மணி நேரத்தில் தேர்வு எழுதச் சென்றப் பெண் அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 22 வயதான ருக்மணி என்ற பெண் தனக்கு குழந்தை பிறந்த 3 மணி நேரத்திற்கு பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியது மக்கள் அனைவருடத்திலும் பேசு பொருளாக மாறியது. பாங்கா மாவட்டத்தில் பட்டியல் இன பெண்ணான ருக்மணி என்பவர் பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தின் 10 ஆம் வகுப்பிற்கான அறிவியல் தேர்வில் பங்கேற்றார். தேர்வு எழுதுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு குழந்தை பெற்ற ருக்மணி தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் ஆம்புலன்சில் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதியுள்ளார்.
மாவட்ட கல்வி அதிகாரி கூறியது :
பெண்களின் கல்விக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த ருக்மணி, அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளார் என்று கூறினார்.
குழந்தை பெற்ற ருக்மணி :
கணிதத்தேர்வு எழுதும் போது சில அசௌகரியங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது, இருப்பினும் குழந்தை பெற்ற பிறகு தேர்வெழுதச் சென்றேன் என்று கூறினார். தன் மகன் வளர்ந்ததும் நன்றாகப் படித்து மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ருக்மணி, தானே தனது மகனுக்கு ஒரு மோசமான முன்மாதிரியாக இருக்கக்கூடாது என்று விரும்பியதாக மேலும் கூறினார்.