பரபரக்கும் குளிர்கால கூட்டத்தொடர்… இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள்…

parliament winter session 2023

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று முதல் அடுத்த 15 வேலை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரையில்) நடைபெற்று, வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரையில் கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

கூட்டத்தொடருக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘ எதிர்க்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறினார். நேற்றைய முடிவுகளின் மூலம் அவர்களின் ஒன்பது ஆண்டுகாலமாக எதிர்மறை விமர்சனம் பரப்பியதற்கு அவர்களுக்கு (காங்கிரஸ்) பலன் கிடைக்கவில்லை. இனி அவர்கள் மாறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக வெற்றி விழா.! அயராத உழைப்பு – ஜேபி நட்டா… எங்கள் அதிர்ஷ்டம் பிரதமர் மோடி.!

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி, பாஜக எம்பி ரமேஷ் பிதுரியை வெளியேற்ற வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பாஜக எம்பி பிதுரி முன்னர் நடைபெற்ற கூட்டத்தொடரில் எம்.பி டேனிஷ் அலி பார்த்து தீவிரவாதி எனும் பொருள்படும்படி, நாடாளுமன்றத்தால் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், எம்.பி டேனிஷ் அலி “ஒரு எம்.பி.யை அவமானப்படுத்துவது நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தியது போல என்றும், “பிதுரியை தண்டியுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்றும் இரண்டு பதாகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு சபைக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி தொடர் அமளியில் ஈடுபாட்டார் . இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் ராஜ்யசபா இரண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பி.வி.சிவதாசன் ராஜ்யசபாவில், உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதன் பிறகு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டி சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது நாடாளுமன்ற ஒழுங்கு குழு விசாரணை நடத்தியது. அது குறித்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை கேள்வி எழுப்படவில்லை. இதுகுறித்து பேசிய மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் அது குறித்து கருத்து தெரிவிப்பதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்