கணவனை கட்டிவைத்து மனைவி பாலியல் பலாத்காரம்..!
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள பூபதி நகரில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு 42 வயது உள்ள ரஹ்மத் அலி ஷேக் கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி விட்டார்.
ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த தம்பதியினர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஷேக் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் மந்திரவாதி ஷேக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் மந்திரவாதி அந்த தம்பதியினருக்கு உதவி செய்வதற்காகத்தான் தான் அப்படி செய்ததாக கூறினார். அவர்கள் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது என கூறி உள்ளார் .