கேப்டன் வருண் சிங் குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது – பிரதமர் மோடி..!

Default Image

கேப்டன் வருண் சிங் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். கேப்டன் வருண் சிங் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்துடன் நாடு துணை நிற்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நல்லடக்கம் நேற்று மாலை 5 மணி அளவில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்