Categories: இந்தியா

சிறையில் இருந்து மிரட்டல் செய்தி அனுப்பிய உ.பி கேங்ஸ்டர் ஆதிக்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published by
மணிகண்டன்

கடந்த சனிக்கிழமை போலீசார் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட உ.பி ரவுடி ஆதிக் அகமதுவின் வாட்டசாப் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. 

கடந்த சனிக்கிழமையன்று, உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பியும், கேங்ஸ்டாருமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் ,  உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்காக குஜராத்தின் சபர்மதி சிறையில் இருந்து பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது காவலர்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு அதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை கொலை செய்தனர்.

சுட்டுக்கொலை :

இதில் கொலையாளிகளை சம்பவ இடத்தியிலேயே காவல்துறையினர் பிடித்தனர். காவல்துறை முன்னிலையியேலே கேங்ஸ்டர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் , சம்பவங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேற்று ஆதிக்-கின் வழக்கறிஞர் வீடு முன்பு  வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும், பதற்றத்தை ஏற்படுத்தியது. இது உள்நோக்கத்துடன் நடந்த வெடிகுண்டு சம்பவம் இல்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

ஆதிக் மிரட்டல் செய்தி :

அதனை அடுத்து தற்போது, ரவுடி ஆதிக் முகமதுவின் வாட்டசாப் செய்திகள் வெளியாகி உள்ளன. அதில், நீங்கள் என்னை மிகவும் சாதகமாக பயன்படுத்தி கொண்டீர்கள். இன்று என்மீது நீங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறையின் நிழலில் இருக்கிறீர்கள் என சிறையிலிருந்தபடி, லக்னோவைச் சேர்ந்த கட்டிட தொழிலதிபருக்கு அதிக் அகமது இந்த செய்தியை அனுப்பியதாக கூறப்படுகிறது.

எனது மகன்கள் :

மேலும், கடைசியாக ஒரு முறை சொல்கிறேன், விரைவில் நிலைமை மாறும், நான் வெளியே வருவேன். நான் இதுவரை மிகவும் பொறுமையாக இருந்தேன். என் மகன்கள் மருத்துவராகவோ அல்லது வக்கீலாகவோ ஆக மாட்டார்கள் என்று மிரட்டும் தொனியில் வாட்சாப் செய்திகள் அனுப்பப்பட்டுளளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை மிரட்டல் :

இதற்கிடையில், உயிரிழந்த ரவுடி ஆதிக் ஆகமதுவால், அச்சுறுத்தப்பட்ட ஒரு ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘அதிக் மூலம் எனது வீட்டை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ராய்ப்பூரில் இருந்த என் மனைவியைக் கொன்றுவிடுவதாக அவர்கள் (ஆதிக்) மிரட்டினர்கள்.’ என கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் :

ஆதிக் அகமது உயிரிழந்த பின்னர் அவர் மிரட்டல் விடுத்த செய்திகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துள்ளது. இந்த தகவல்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெரும் ஆதிக் அகமதுவின் மரணம் தொடர்பான விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

5 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

5 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

6 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

6 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

6 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

7 hours ago