“போராடியதற்கு துப்பாக்கிச்சூடு” “மீண்டும் ஒரு தமிழகம்” பள்ளி மாணவர்கள் மீது வெறியாட்டம் ஆடிய மேற்கு வங்க அரசு..!!
பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்திருக்கிறது மேற்குவங்க மம்தா அரசு. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்து எழுந்துள்ளது.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி காட்டாட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை சற்றும் சகித்துக் கொள்ளமுடியாத மம்தா பானர்ஜி, பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. மேற்குவங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இங்கு உள்ள உயர்நிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வியாழனன்று, அரசு நிர்வாகம் சற்றும் கண்டுகொள்ளாத நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக மம்தா அரசு காவல்துறையை ஏவி கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. சின்னஞ்சிறு பள்ளி மாணவர்கள் என்றும் பாராமல், கண்மூடித்தனமாக அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ராஜேஷ் சர்க்கார் என்ற மாணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தபஸ் பர்மன் என்ற முன்னாள் மாணவர் குண்டு பாய்ந்த நிலையில், வெள்ளியன்று காலை மரணமடைந்தார். ஏராளமான மாணவர்களுக்கு கடுமையான குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கொடிய தாக்குதலை கண்டித்து வெள்ளியன்று மேற்கு வங்க மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கொந்தளிப்பு மிக்க போராட்டத்தை நடத்தினர். போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு மேற்குவங்க மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
DINASUVADU